/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொங்கல் பண்டிகை சந்தையில் சேவல் விற்பனை விறுவிறுப்பு
/
பொங்கல் பண்டிகை சந்தையில் சேவல் விற்பனை விறுவிறுப்பு
பொங்கல் பண்டிகை சந்தையில் சேவல் விற்பனை விறுவிறுப்பு
பொங்கல் பண்டிகை சந்தையில் சேவல் விற்பனை விறுவிறுப்பு
ADDED : ஜன 11, 2024 11:19 PM

பொள்ளாச்சி;பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொள்ளாச்சி சந்தையில் சேவல் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், பொங்கல் பண்டிகை விமரிசையாக கொண்டாட விவசாயிகள் தயராகி வருகின்றனர். இதற்காக, கிராமங்களில் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடுவது வழக்கம்.
இந்நிலையில், பொள்ளாச்சி காந்தி வாரச்சந்தையில் நேற்று சேவல் விற்பனை களைகட்டியது. பொள்ளாச்சி, உடுமலை, பழநி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், தாராபுரம், குண்டடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சேவல்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
இந்த சேவல்களை வாங்க, பொள்ளாச்சி மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாாரிகள் வந்தனர். இதனால், வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது.
இதுகுறித்து, வியாபாரிகள் கூறியதாவது:-
பொள்ளாச்சி வருவாய் கோட்டப்பகுதிகளில், சேவல் சண்டை நடத்த அனுமதிப்பதில்லை. தற்போது, அனுமதி அளிக்க வேண்டும் என, சப் - கலெக்டரிடம் சேவல் ஆர்வலர்கள், விவசாயிகள் மனு கொடுத்துள்ளனர்.
சேவல் சண்டை நடத்தப்படாவிட்டாலும், அவற்றை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவோர், சந்தைக்கு வந்தனர். பொள்ளாச்சியில் வாரந்தோறும் வியாழக்கிழமை பந்தய சேவல் விற்பனை நடக்கிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நேற்று, 500-க்கும் மேற்பட்ட சேவல்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. சேவல்களில் கம்பீரம் மற்றும் அவற்றை மோத விட்டு அதன் ஆக்ரோஷத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒரு சேவல் இரண்டாயிரம் முதல், எட்டாயிரம் ரூபாய் வரை விற்பனையானது.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.