தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வேரோடு சாய்ந்த அரசமரம் ஒரு மணி நேரம் டிராபிக் கட்

வேரோடு சாய்ந்த அரசமரம் ஒரு மணி நேரம் டிராபிக் கட்

வேரோடு சாய்ந்த அரசமரம் ஒரு மணி நேரம் டிராபிக் கட்


ADDED : செப் 18, 2026 04:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 18, 2026 04:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பேரூர், செப்.

19-

ராமசெட்டிபாளையத்தில், கோவைப்புதூர் சாலையோரத்தில் விநாயகர் கோயில் முன்பு, 50 ஆண்டுகளான அரசமரம் இருந்தது. வியாழன் இரவு திடீரென மரம் வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. அங்கிருந்த மின்கம்பம் முற்றிலும் சேதம் அடைந்தது. மின்சார வாரியத்துக்கு தகவல் அனுப்பினர். அப்பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. மரம் சாய்ந்தபோது அங்கு யாரும் இல்லாததால், உயிர் சேதம் இல்லை. ஆனால் போக்குவரத்து முடங்கியது. நெடுஞ்சாலை, தீயணைப்பு துறையினர் வந்து மக்கள் உதவியுடன் மரத்தை வெட்டி அகற்றினர். ஒரு மணி நேரத்துக்கு பின் போக்குவரத்து சீரானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us