/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு மேல்நிலைப்பள்ளியை தத்தெடுத்தது ரூட்ஸ் நிறுவனம்
/
அரசு மேல்நிலைப்பள்ளியை தத்தெடுத்தது ரூட்ஸ் நிறுவனம்
அரசு மேல்நிலைப்பள்ளியை தத்தெடுத்தது ரூட்ஸ் நிறுவனம்
அரசு மேல்நிலைப்பள்ளியை தத்தெடுத்தது ரூட்ஸ் நிறுவனம்
ADDED : பிப் 01, 2025 01:58 AM

கோவை; தமிழக அரசின் பள்ளி கல்வி துறையின் நம்ம ஸ்கூல், நம்ம ஊரு பள்ளி திட்டத்தின் கீழ், கோவை கணபதி அரசு மேல்நிலைப்பள்ளியைத் தத்தெடுத்து, தரம் உயர்த்த கோவை ரூட்ஸ் குழுமம் திட்டமிட்டுள்ளது.
இதற்கான துவக்க விழா, பள்ளி வளாகத்தில் நடந்தது. கலெக்டர் கிராந்திகுமார் தலைமை வகித்தார். ரூட்ஸ் நிறுவனங்களின் இயக்குனர் கவிதாசன் வரவேற்றார்
ரூட்ஸ் நிறுவனங்களின் தலைவர் ராமசாமி பேசியதாவது:
அடுத்த 5 ஆண்டுகளில், ஒரு கோடி ரூபாய் செலவில், பள்ளி மேம்படுத்தப்பட உள்ளது. கட்டடங்கள், வகுப்பறைகள் புனரமைப்பு செய்யப்படும். அனைத்து அடிப்படை வசதிகளும் பூர்த்தி செய்யப்பட உள்ளன. முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் பங்களிப்புடன், பள்ளியின் கற்றல் - கற்பித்தல் திறன் மேம்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, செல்வம் ஏஜென்சீஸ் உரிமையாளர் நந்தகுமார், பயிற்சி வன அலுவலர் துஷார் ஷிண்டே, ரூட்ஸ் நிறுவனங்களின் இயக்குனர்கள் பாலசுப்ரமணியம், சந்திரசேகர், தலைமை ஆசிரியை மணிமாலா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.