/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பழநியில் இன்று, நாளை ரோப் கார் சேவை நிறுத்தம்
/
பழநியில் இன்று, நாளை ரோப் கார் சேவை நிறுத்தம்
ADDED : பிப் 20, 2024 05:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி மலைக்கு சென்று வர பயன்படும் ரோப் கார் சேவை இன்றும், நாளையும் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட உள்ளது.
பழநி முருகன் மலைக்கோவில் சென்று வர ரோப் கார், வின்ச், படிப்பாதை, யானைப்பாதை வழிகள் உள்ளன. ரோப் கார் சேவையில் 3 நிமிடத்தில் மலைக்கோவில் செல்லலாம்.
மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் இன்றும், நாளையும் ரோப் கார் சேவை நிறுத்தப்பட உள்ளது.
பக்தர்கள் வின்ச், படி பாதை, யானைப்பாதைகளை பயன்படுத்துமாறு கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

