/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்ராக்ட் நிர்வாகி பதவியேற்பு விழா
/
ரோட்ராக்ட் நிர்வாகி பதவியேற்பு விழா
ADDED : ஜூலை 28, 2025 09:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; கோவை கிராமப்புறம், நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கிய மாவட்ட ரோட்ராக்ட் கிளப் அமைத்தல், மற்றும் 2025--26ம் ஆண்டுக்கான தலைவர் பதவியேற்பு விழா, பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரியில் நடந்தது.
விழாவை, மாவட்ட தலைவர் தமிழரசன்மணி துவக்கி வைத்தார். மாவட்ட ஆளுநர் தனசேகர், நிகழ்ச்சி தலைவர் குருகேசவ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, புதிய தலைவராக செல்வவிக்னேஷ் பதிவியேற்றார்.
மாவட்ட ரோட்ராக்ட் தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜலட்சுமி, பொள்ளாச்சி ரோட்டரி நிர்வாகிகள் சதீஷ்சந்திரன், கவுதம், கிரண் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், நிர்வாகி ரிதிகா நன்றி கூறினார்.