/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு வக்கீலுக்கு ரோட்டரி விருது
/
அரசு வக்கீலுக்கு ரோட்டரி விருது
ADDED : ஆக 12, 2025 09:17 PM
கோவை,; அதிக வழக்குகளில் தண்டனை பெற்று கொடுத்த அரசு தரப்பு வக்கீலுக்கு, விருது வழங்கப்பட்டது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, தொண்டாமுத்துார் ரோட்டரி கிளப் சார்பில், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு விருது வழங்கும் விழா, கோவையில் நடந்தது.
இதில், கோவை அரசு தரப்பு சிறப்பு வக்கீல் பி.கிருஷ்ணமூர்த்திக்கு, 'நீதி செம்மல்' என்ற விருது வழங்கப்பட்டது. கோவை சார்பு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராகி வாதாடி, அதிக வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுத்ததற்கு, இந்த விருது வழங்கப்பட்டது.
இவ்விருதினை இ.எஸ்.ஐ., முன்னாள் இயக்குனர் டாக்டர் ஜெய ராஜமூர்த்தி வழங்கினார். கிருஷ்ணமூர்த்திக்கு, கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பாலகிருஷ்ணன் பணியில் இருந்த போது, 'கிங் ஆப் கன்விக்சன்' என்ற விருது வழங்கியது குறிப்பிடத்தக்கது.