/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டரி கிளப் சார்பில் இளையராஜாவுக்கு விருது
/
ரோட்டரி கிளப் சார்பில் இளையராஜாவுக்கு விருது
ADDED : ஜூன் 07, 2025 09:20 AM

கோவை; கோவையில் ரோட்டரி கிளப் சார்பில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, வொக்கேஷனல் எக்ஸலன்ஸ், விருது வழங்கப்பட்டது.
ரோட்டரி மாவட்டம் -- 3201 சார்பில் அவிநாசி சாலையிலுள்ள ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட கவர்னர் வக்கீல் சுந்தரவடிவேலு, முதல் பெண்மணி முருகாம்பாள் ஆகியோருடன் நிர்வாகிகள் இணைந்து, ரோட்டரி அமைப்பின் உயரிய லொக்கேஷனல் எக்ஸலன்ஸ் விருதை, இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வழங்கினர்.
முன்னதாக இளையராஜா பேசுகையில், ''கோவையில் எனது காலடி படாத, ஆர்மோனியம் ஒலிக்காத இடங்களே கிடையாது. தற்போது அவ்விடங்களில் கட்டடங்கள் உள்ளன.
எனது ஆர்மோனியம் இப்பகுதியை சேர்ந்த பொன்னையா என்பவர் செய்து, எனது அண்ணனால் வாங்கப்பட்டது. இதுவரையிலும் அதில்தான் 'கம்போசிங்' செய்கிறேன். ஆதலால் கோவையுடனான எனது தொடர்பை பிரிக்க இயலாது, என்றார்.
ரோட்டரி அமைப்பின் ஸ்மிதா மற்றும் ரோட்டரி மாவட்டம் 3201 நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.