/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டரி ஐகான்சின் 'அரீனா' ஆதரவற்ற குழந்தைகள் ஆனந்தம்
/
ரோட்டரி ஐகான்சின் 'அரீனா' ஆதரவற்ற குழந்தைகள் ஆனந்தம்
ரோட்டரி ஐகான்சின் 'அரீனா' ஆதரவற்ற குழந்தைகள் ஆனந்தம்
ரோட்டரி ஐகான்சின் 'அரீனா' ஆதரவற்ற குழந்தைகள் ஆனந்தம்
ADDED : ஜன 29, 2024 11:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;ரோட்ராக்ட் கிளப் ஆப் கோயம்புத்துார் சார்பில், ஆதரவற்ற குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள், கண் மற்றும் பல் பரிசோதனை முகாம், 'அரீனா 7.0' ஆர்.எஸ்.புரம் நேரு வித்யாலயா பள்ளியில் நடந்தது.
இதில், 15 ஆதரவற்றோர் இல்லங்களை சேர்ந்த, 400க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் பங்கேற்றனர். அவர்களுக்கு கண் பரிசோதனை மற்றும் பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, 100மீ., 200மீ., 400மீ., நீளம் தாண்டுதல், தொடர் ஓட்டம், ஸ்கிப்பிங், துப்பாக்கி சுடுதல், பந்து எறிதல், குண்டு எறிதல் உள்ளிட்டப பல்வேறு போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்கப்பட்டன.