/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குறிச்சி பிரிவு பகுதியில் 'ரவுண்டானா' எளிதாகிறது வாகன போக்குவரத்து
/
குறிச்சி பிரிவு பகுதியில் 'ரவுண்டானா' எளிதாகிறது வாகன போக்குவரத்து
குறிச்சி பிரிவு பகுதியில் 'ரவுண்டானா' எளிதாகிறது வாகன போக்குவரத்து
குறிச்சி பிரிவு பகுதியில் 'ரவுண்டானா' எளிதாகிறது வாகன போக்குவரத்து
ADDED : ஏப் 12, 2025 11:30 PM

கோவை: குறிச்சி பிரிவு பகுதியில், போக்குவரத்து சிக்னல் இல்லாமல், வாகனங்கள் கடந்து செல்லும் வகையில், 'ரவுண்டானா' அமைக்கப்பட்டுள்ளது.
கோவை ஆத்துப்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள், போத்தனுார் ரோட்டில் வரும் வாகனங்கள், பொள்ளாச்சி ரோட்டில் குறிச்சி குளக்கரை வழியாக வரும் வாகனங்கள் குறிச்சி பிரிவில் சந்திக்கின்றன.
அவ்விடத்தில், தானியங்கி சிக்னல் இருந்தது. என்றாலும் கூட, சிக்னல்களை மதிக்காமல் வாகன ஓட்டிகள் சென்று வந்தனர். அப்பகுதியில் போக்குவரத்து சிரமம் ஏற்பட்டு வந்தது. இதற்கு தீர்வு காண அப்பகுதியை அகலப்படுத்தி, ரூ.1.8 கோடியில் 'ரவுண்டானா' அமைக்கப்படுகிறது.
மாநில நெடுஞ்சாலைத்துறை சாலை பாதுகாப்பு கோட்ட பொறியாளர் மனுநீதி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து, சாலையை மேம்படுத்தி, 'ரவுண்டானா' அமைத்துள்ளனர். தற்போது வாகனங்கள் சிரமமின்றி செல்கின்றன.
அதேநேரம், பொள்ளாச்சி ரோட்டில் இருந்து அதிவேகமாக வாகனங்கள் வருவது கண்டறியப்பட்டது. அதனால், மூன்று சாலைகளிலும் வேகத்தடை மற்றும் ரோட்டின் குறுக்கே பாதசாரிகள் நடந்து செல்ல 'ஜீப்ரா கிராஸிங்' கோடுகள் வரைய முடிவு செய்யப்பட்டுள்ளது.
'ரவுண்டானா' மையத்தில் உயர்கோபுர விளக்கு பொருத்தப்பட உள்ளது. பின், சாலை தீவுத்திடல்கள் மற்றும் 'ரவுண் டானா' பகுதியில் வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பாத வகையில் சுற்றிலும் இரும்பு கிரில் அமைத்து, செடிகள் வளர்க்கவும் நெடுஞ்சாலைத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

