/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போத்தனுாரில் ரவுண்டானா; மாநகராட்சி கமிஷனர் ஆய்வு
/
போத்தனுாரில் ரவுண்டானா; மாநகராட்சி கமிஷனர் ஆய்வு
ADDED : ஏப் 26, 2025 11:14 PM
போத்தனூர்: கோவை போத்தனூரில் ரயில் கல்யாண மண்டபம் அருகே துவங்கும் மேம்பாலம், செட்டிபாளையம் சாலையில் வெள்ளலூர் சாலை சந்திப்பிற்கு சிறிது முன்பாக முடிவடைகிறது.
இதில் ரயில் கல்யாண மண்டபம் முன், சுந்தராபுரம் வருவதற்கான சாலை சந்திக்கிறது. இதனால் இவ்விடத்தில் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.
இதனை தவிர்க்க, போக்குவரத்து போலீசார் தற்காலிகமாக ரவுண்டானா போல் அமைத்துள்ளனர். இருப்பினும் வாகன ஓட்டிகளின் பொறுமையின்மையால், சில நேரங்களில் முட்டல், மோதல் நடக்கிறது.
இந்நிலையில் இவ்விடத்தில், நிரந்தர ரவுண்டானா அமைக்க போலீசார் முடிவு செய்தனர். இவ்விடத்தை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆய்வு செய்தார். அதுபோலவே வெள்ளலூர் சாலை சந்திப்பு ஜி.டி.டேங்க் பகுதியையும் பார்வையிட்டார்.
போலீஸ் துணை கமிஷனர் (போக்குவரத்து) அசோக்குமார், கூடுதல் துணை கமிஷனர் (திட்டமிடல்) சிற்றரசு, உதவி கமிஷனர் தென்னரசு, இன்ஸ்பெக்டர் பெரியசாமி, எஸ்.ஐ.கள், உதயகுமார், அருள், ரமேஷ், மாநகராட்சி  உதவி செயற்பொறியாளர் கனகராஜ், உதவி இன்ஜி..கள்  ஜெகதீஸ்வரி, சரண்யா, கவுன்சிலர் அஸ்லாம் பாஷா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

