தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வஞ்சிக்கப்பட்ட 5வது வார்டில் வரிசை கட்டி நிற்கும் பிரச்னைகள்

வஞ்சிக்கப்பட்ட 5வது வார்டில் வரிசை கட்டி நிற்கும் பிரச்னைகள்

வஞ்சிக்கப்பட்ட 5வது வார்டில் வரிசை கட்டி நிற்கும் பிரச்னைகள்


ADDED : அக் 23, 2026 07:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 23, 2026 07:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரமடை: காரமடை 5வது வார்டில் பொன்விழா நகர், மணிகண்டன் நகர், பாலதண்டாயுதம் நகர், ராயல் கார்டன், வெற்றி லே அவுட், நீச்சல் குளம், பள்ளி வாசல் தெரு, கோவில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், 900க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. 2,700க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இதில், மணிகண்டன் நகரில் 150 குடியிருப்புகள் உள்ளன. சாக்கடை வசதி இப்பகுதிக்கு இல்லை. ராயல் கார்டன், பாலதண்டாயுதம் நகர் பகுதியில் மண் சாலைகள் அதிகம் உள்ளன.

இதுகுறித்து, தியாகராஜன் கூறுகையில், மணிகண்டன் நகரில் சாக்கடை வசதி இல்லாததால், வீடுகள் முன் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. கொசு தொல்லைகள் அதிகம் உள்ளது. இப்பகுதி மேடான பகுதி என்பதால், தண்ணீர் மிகவும் சன்னமாக வருகிறது. மேல்நிலைத்தொட்டி கட்டினால் குடிநீர் விநியோகம் சீராக வரும்’ என்றார்.

தேவதாஸ் கூறுகையில், ‘மழை பெய்யும் போது மண் சாலைகளில் தண்ணீர் தேங்குவதால் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. போதுமான அளவு மின்கம்பம் இல்லாததால் பல இடங்களில் இருள் சூழ்ந்துள்ளது. இதனால் பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளது. இதுதொடர்பாக எழுத்து வாயிலாகவும், நேரடியாகவும் நகராட்சி நிர்வாகத்திற்கு, பல முறை புகார் அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் முன்னேற்றமும் இல்லை, என்றார்.

கனேசன் கூறுகையில், மணிகண்டன் நகர் மற்றும் ராயல் கார்டன் பகுதிகளில் 2 ஏக்கர் அளவில் பொது இடம் உள்ளது. இந்த இடத்தில் சிறுவர் பூங்கா, நூலகம், விளையாட்டு மைதானம், சுகாதார நிலையம், அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவைகள் அமைக்க வேண்டும். தெரு நாய்கள் தொல்லைகள் அதிகம் உள்ளது. இருளான பகுதிகளில் சமூக விரோதிகள் போதைப்பொருட்களை உபயோகிக்கின்றனர். பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை உள்ளது, என்றார்.

ரமேஷ்குமார் கூறுகையில், பொன்விழா நகரில் தார் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு செல்வதில் கூட சிரமம் உள்ளது. வெற்றி லே அவுட் பகுதியில் சாக்கடை வசதி இல்லை. இதனால் வீடுகளில் கழிவுநீர் கசிந்து துர்நாற்றம் வீசுகிறது. மழை காலங்களில் கால்வாய் முழுவதும் தண்ணீர் செல்வதால் போக்குவரத்து தடை ஏற்படுகிறது. அப்பகுதியில் சிறிய பாலம் அமைத்து தர வேண்டும். நீச்சல் குளம் பகுதியில் மண் சாலை மட்டுமே உள்ளதால், யாராவது இறந்துவிட்டால் கூட உடலை எடுத்துச் செல்வதில் கடும் சிரமம் ஏற்படுகிறது, என்றார்.

ஜாகீர் உசேன் கூறுகையில், பொன்விழா நகரில் சிறுவர் விளையாடுவதற்கும், பெரியவர்கள் நடைபயிற்சி செல்லும் வகையிலும், உடற்பயிற்சி கூடம் இருக்கும் வகையிலும் பூங்கா அமைத்து தர வேண்டும்’ என்றார்.

5 வது வார்டு கவுன்சிலர் ரவிக்குமார் (தி.மு.க) கூறுகையில், ‘வெற்றி லே அவுட் பகுதியில் மக்கள் குப்பைகளை வீசி செல்கின்றனர். அங்கு மதில் சுவர் அமைக்க நகராட்சியிடம் வலியுறுத்தி உள்ளேன்.சாக்கடை வசதி, தார் சாலை சீரமைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளித்து, நடவடிக்கை எடுக்க கோரி பல முறை நகராட்சியிடம் மனு அளித்தும், எந்த பயனும் இல்லை. கோவில் தெருவில் உப்பு தண்ணீர் கொடுப்பதற்கு பழுதான மோட்டாருக்கு பதில் புதிய போர் மோட்டார் அமைத்து தர சொல்லி 30 நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் நகராட்சியில் எந்த நடவடிக்கையும் இல்லை. அதிகாரிகள் கவுன்சிலர்களை மதிப்பது இல்லை. என் வார்டுக்கு நிதி ஒதுக்குவதில் பாகுபாடு உள்ளது. எனது வார்டு நகராட்சி சார்பில் வஞ்சிக்கப்பட்ட வார்டாக உள்ளது, என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us