sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பெயின்டரை தாக்கிய ரவுடிகள் ஒருவருக்கு சிறை; பிறருக்கு வலை

/

பெயின்டரை தாக்கிய ரவுடிகள் ஒருவருக்கு சிறை; பிறருக்கு வலை

பெயின்டரை தாக்கிய ரவுடிகள் ஒருவருக்கு சிறை; பிறருக்கு வலை

பெயின்டரை தாக்கிய ரவுடிகள் ஒருவருக்கு சிறை; பிறருக்கு வலை


ADDED : பிப் 20, 2025 06:17 AM

Google News

ADDED : பிப் 20, 2025 06:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை, புலியகுளம், அம்மன்குளம் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் ராஜ்குமார், 27; பெயின்டர். இவர் கடந்த, 17ம் தேதி வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பல்வேறு அடி தடி, கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் சக்திவேல், 21, விக்னேஷ், 22, நாகார்ஜூன், 21 ஆகியோர் பொது இடத்தில் நின்று, தகாத வார்த்தைகளால் சத்தம் போட்டு பேசிக்கொண்டிருந்தனர்.

அவர்களை ராஜ்குமார் தட்டி கேட்டார். ஆத்திரம் அடைந்த ரவுடிகள், ராஜ்குமாரை சரமாரியாக தாக்கி மண்டையை உடைத்தனர். அங்கிருந்த ஆட்டோ டிரைவர் மேத்யூ, மூன்று பேரையும் தடுத்து ராஜ்குமாரை மீட்டார். ரவுடிகளை கண்டித்துள்ளார்.

இதனால், மூவரும் கீழே கிடந்த கற்களை எடுத்து, மேத்யூவின் ஆட்டோ கண்ணாடியை உடைத்து விட்டு தப்பினர். காயமடைந்த ராஜ்குமார், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது புகாரின்படி, ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, சக்திவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய விக்னேஷ் மற்றும் நாகார்ஜூன் ஆகியோரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us