/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வழிப்பறி வழக்கில் ரவுடிக்கு மூன்று ஆண்டுகள் சிறை
/
வழிப்பறி வழக்கில் ரவுடிக்கு மூன்று ஆண்டுகள் சிறை
வழிப்பறி வழக்கில் ரவுடிக்கு மூன்று ஆண்டுகள் சிறை
வழிப்பறி வழக்கில் ரவுடிக்கு மூன்று ஆண்டுகள் சிறை
ADDED : நவ 25, 2025 05:24 AM
கோவை: பேரூரை சார்ந்த சரவணகுமார் என்பவர், தனது நண்பர்களுடன் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது, ரத்னபுரியை சேர்ந்த கார்த்திக் ராஜா,27, என்பவர் கத்தியை காட்டி மிரட்டி, வழிப்பறி செய்தார். அவர் கூச்சலிட்டதால் கார்த்திக் ராஜா தப்பினார்.
புகாரின் பேரில், பேரூர் போலீசார் விசாரித்து கார்த்திக் ராஜாவை கைது செய்து, கோவை முதலாவது கூடுதல் சார்பு கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர்.
விசாரித்த நீதிபதி செந்தில்குமார், குற்றம் சாட்டப்பட்ட கார்த்திக் ராஜாவுக்கு, மூன்றாண்டு சிறை, 1,000 ரூபாய் விதித்து, நேற்று தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் ஆஜரான, கோவை சார்பு நீதிமன்றங்களுக்கான, அரசு தரப்பு கூடுதல் வக்கீல் பி.கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ''கோவையிலுள்ள ஐந்து சார்பு கோர்ட்களில், கடந்த ஐந்தாண்டுகளில் ஒவ்வொரு கோர்ட்டிலும், நுாற்றுக்கணக்கான வழக்குகளில் விசாரணை நடத்தி தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதில், 50 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது.
அதிக வழக்கில் தண்டனை பெற்று கொடுத்ததால், போலீஸ் அதிகாரிகள் பாராட்டு சான்றிதழ் வழங்கினர்,'' என்றார்.

