/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை விமான நிலையத்தில் ராயல்கேர் பரிசோதனை அறை
/
கோவை விமான நிலையத்தில் ராயல்கேர் பரிசோதனை அறை
ADDED : ஏப் 24, 2025 11:28 PM

கோவை;கோவை விமான நிலையத்தில், ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் சார்பில் அமைக்கப்பட்ட, புதிய மருத்துவ பரிசோதனை அறை செயல்பாட்டுக்கு வந்தது. விமான நிலைய இயக்குனர் சம்பத்குமார், பரிசோதனை அறையை திறந்துவைத்தார்.
இதில் மருத்துவ ஆலோசனை, முதலுதவி சிகிச்சை, சி.பி.ஆர்., அவசர மருத்துவ உதவிகள், 24 மணி நேர ஆம்புலன்ஸ் சேவை வழங்கப்படுகிறது. மருத்துவர்கள், பராமரிப்பு பணியாளர்கள் முழுநேரமும் பணியாற்றுவார்கள்.
திறப்பு விழாவில், ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தலைவர் மாதேஸ்வரன், விமான நிலைய மேலாளர் (பொதுப்பணிகள்) சரவணன், ராயல் கேர் மருத்துவ இயக்குனர் பரந்தாமன் சேதுபதி, தலைமை செயலர் அலுவலர் மணிசெந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
விமான நிலைய மருத்துவ சேவைகளுக்காக பயணிகள், 74492 55000 என்ற உதவி எண்ணில் அழைக்கலாம்.

