/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆர்.ஆர். சாய் அபினவ் அணிக்கு சாம்பியன்ஷிப்! 'தினமலர்' அபார்ட்மென்ட் ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் அபாரம்
/
ஆர்.ஆர். சாய் அபினவ் அணிக்கு சாம்பியன்ஷிப்! 'தினமலர்' அபார்ட்மென்ட் ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் அபாரம்
ஆர்.ஆர். சாய் அபினவ் அணிக்கு சாம்பியன்ஷிப்! 'தினமலர்' அபார்ட்மென்ட் ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் அபாரம்
ஆர்.ஆர். சாய் அபினவ் அணிக்கு சாம்பியன்ஷிப்! 'தினமலர்' அபார்ட்மென்ட் ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் அபாரம்
ADDED : டிச 28, 2024 12:29 AM

'தினமலர்' சார்பில் நடந்த, 'அபார்ட்மென்ட் ஜூனியர் கிரிக்கெட் லீக்' போட்டியில் ஆர்.ஆர்., சாய் அபினவ் அணியானது சிறுவர்களின் அதிரடியான ஆட்டத்தால், 'சாம்பியன்ஷிப்' வென்றது.
கடந்த செப்., மாதம் நம் நாளிதழ் சார்பில், 16 அணிகள் பங்கேற்ற 'அபார்ட்மென்ட் சீனியர்களுக்கான கிரிக்கெட் சாம்பியன்ஷிப்-2024' போட்டிகள் நடந்தன.
கடந்த மாதம், 32 அணிகள் பங்கேற்ற கல்லுாரிகளுக்கு இடையேயான 'தினமலர் பிரீமியர் லீக்' கிரிக்கெட் போட்டி நடந்தது.
ஜூனியர் வீரர்களையும் ஊக்குவிக்கும் விதமாக, 'அபார்ட்மென்ட் ஜூனியர் கிரிக்கெட் லீக்-2024' போட்டி, கடந்த இரு நாட்களாக, சி.ஐ.டி., கல்லுாரி மைதானத்தில் நடந்தது.
'தினமலர்' நாளிதழ் மற்றும் நேஷனல் மாடல் குழும பள்ளிகள் சார்பில் நடந்த போட்டியானது, எட்டு அணிகளை கொண்டு, 10 ஓவர்கள் டென்னிஸ் பந்தில் நடத்தப்பட்டது.
திருப்பூர் டிராபீஸ், ஸ்போர்ட்ஸ் லேண்ட் மற்றும் 'ஓகே' ஸ்வீட்ஸ் ஆகியனவும் 'தினமலர்' நாளிதழுடன் கரம் கோர்த்து வழங்கின. நேற்றைய முதல் அரையிறுதியில், ஆர்.ஆர்., துர்யா அணியும், ஜெயின்ஸ் ஸ்ரீவெங்கடேஸ்வரா (ஹோப்ஸ் 11) அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஹோப்ஸ் 11 அணி, 10 ஓவர்களில், 2 விக்கெட்டுக்கு, 159 ரன்கள் எடுத்தது.
ஆர்.ஆர்., துர்யா அணியோ, 10 ஓவர்களில், 7 விக்கெட் இழப்புக்கு, 79 ரன்கள் மட்டுமே எடுத்து இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இழந்தது. 123 ரன்கள் எடுத்த ஹோப்ஸ் 11 அணி வீரர் மபாசி அகமதுவுக்கு, ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
இரண்டாம் அரையிறுதியில், மான்செஸ்டர்ஸ் சிட்டாரா(பீளமேடு), ஆர்.ஆர்., சாய் அபினவ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆர்.ஆர்., சாய் அபினவ் அணி, 10 ஓவரில், 4 விக்கெட்டுக்கு, 139 ரன்கள் எடுத்தது.
அடுத்து விளையாடிய, மான்செஸ்டர் அணி, 8 ஓவரில், 24 ரன்களுக்கு 'ஆல் அவுட்' ஆனது. 71 ரன்கள் எடுத்த ஆர்.ஆர்., சாய் அபினவ் அணி வீரர் சுகேசுக்கு. ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
இறுதிப்போட்டி
பலம் வாய்ந்த, ஆர்.ஆர்., சாய் அபினவ் அணியும், ஹோப்ஸ் 11 அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆர்.ஆர்., சாய் அபினவ் அணி, 10 ஓவரில் நான்கு விக்கெட்டுக்கு, 102 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய, ஹோப்ஸ் 11 அணி வீரர்கள், 10 ஓவர் முடிவில், 4 விக்கெட்டுக்கு, 75 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.
வீரர்களுக்கு பரிசு மழை!
'சாம்பியன்ஷிப்' வென்ற ஆர்.ஆர்., சாய் அபினவ் அணிக்கு கோப்பை மற்றும் கிரிக்கெட் பேட்களையும், இரண்டாம் பரிசு வென்ற ஹோப்ஸ் 11 அணிக்கு கோப்பை மற்றும் பேட்டிங் கிளவுஸ்களையும், நேஷனல் மாடல் குழும பள்ளிகளின் இயக்குனர் மோகன், பரிசுகளாக வழங்கினார். துணைத் தலைவர் பிரதீப் உடனிருந்தார்.
இறுதிப்போட்டியில், 34 ரன்கள் எடுத்த ஆர்.ஆர்.சாய் அபினவ் அணி வீரர் சுகேசுக்கு, 'ஓகே' ஸ்வீட்ஸ் நிறுவனத்தை சேர்ந்த சரவண பிரபு ஆட்ட நாயகன் விருது வழங்கினார். வீரர் நகுலன் பாரதிக்கு, 'எமர்ஜிங் பிளேயர்' விருதினை, 'ஓகே' ஸ்வீட்ஸ் நிறுவனத்தை சேர்ந்த ஜோதி வழங்கினார்.
வீரர் மபாசி அகமதுவுக்கு, 'பெஸ்ட் பேட்ஸ்மேன்' விருதினை, ஸ்போர்ட்ஸ் லேண்ட் நிர்வாக இயக்குனர் நவீன் ஜான், வீரர் ஜெய் கிருஷ்ணாவுக்கு, 'பெஸ்ட் பவுலர்' விருதினை, ஸ்போர்ட்ஸ் லேண்ட் நிர்வாக இயக்குனர் சஞ்சய் ஜான்சன், வீரர் மபாசி அகமதுவுக்கு 'பிளேயர் ஆப் தி டோர்னமென்ட்' விருதினை, திருப்பூர் டிராபீஸ் உரிமையாளர் கண்ணன் ஆகியோர் வழங்கினர்.

