/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
1,208 வீதிகளுக்கு புது ரோடு ரூ.106.18 கோடி ஒதுக்கியாச்சு!
/
1,208 வீதிகளுக்கு புது ரோடு ரூ.106.18 கோடி ஒதுக்கியாச்சு!
1,208 வீதிகளுக்கு புது ரோடு ரூ.106.18 கோடி ஒதுக்கியாச்சு!
1,208 வீதிகளுக்கு புது ரோடு ரூ.106.18 கோடி ஒதுக்கியாச்சு!
ADDED : பிப் 17, 2024 02:18 AM
கோவை;கோவை நகர் பகுதியில், 203 கி.மீ., துாரத்துக்கு, 1,208 வீதிகளில் ரோடுகளை புதுப்பிக்க, மாநகராட்சிக்கு ரூ.106.18 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட, 100 வார்டுகளில் குடிநீர், பாதாள சாக்கடை குழாய், காஸ் குழாய் பதித்தல், தொலைத்தொடர்பு துறை ஒயர் பதித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ரோட்டை தோண்டியதால், குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
வாகன ஓட்டிகள், மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இதன் காரணமாக, தமிழக அரசு மீது மாநகர மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இதற்கு தீர்வு காண, ரோடுகளை சீரமைக்க, தமிழக அரசு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டுமென்கிற கோரிக்கை எழுந்தது. முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு இப்பிரச்னை கொண்டு செல்லப்பட்டதும், ரோடு போடுவதற்காக வீதி வாரியாக பட்டியலிடப்பட்டு, சிறப்பு நிதி ஒதுக்கினார்.
தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டு உட்கட்டமைப்பு திட்டம் (டூரிப்), நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம் (என்.எஸ்.எம்.டி.,), மாநில மானிய நிதியின் (எஸ்.எப்.சி.,) கீழ், பல்வேறு கட்டங்களாக நிதி ஒதுக்கப்படுகிறது.
தற்போது, மாநகராட்சி பகுதிகளில் விடுபட்ட உட்புற சாலைகள் கணக்கிடப்பட்டு, மேலும் நிதி ஒதுக்க கருத்துரு அனுப்பப்பட்டது.
இதில், 'டூரிப்' திட்டத்தில், 636 வீதிகளில், 102 கி.மீ., துாரத்துக்கு ரூ.50.75 கோடி, என்.எஸ்.எம்.டி., திட்டத்தில், 409 வீதிகளில், 64 கி.மீ., துாரத்துக்கு ரூ.28.80 கோடி, எஸ்.எப்.சி., திட்டத்தில், 163 வீதிகளில், 37 கி.மீ., துாரத்துக்கு ரூ.26.63 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. ஒட்டுமொத்தமாக, 1,208 வீதிகளில், 203 கி.மீ., துாரத்துக்கு ரோடு போடுவதற்கு ரூ.106.18 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.