/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சூழலை மாசுபடுத்தியதற்காக 12.28 கோடி ரூபாய் அபராதம்
/
சூழலை மாசுபடுத்தியதற்காக 12.28 கோடி ரூபாய் அபராதம்
சூழலை மாசுபடுத்தியதற்காக 12.28 கோடி ரூபாய் அபராதம்
சூழலை மாசுபடுத்தியதற்காக 12.28 கோடி ரூபாய் அபராதம்
ADDED : ஜன 01, 2026 05:05 AM
கோவை: தடாகம் பள்ளத்தாக்கில் செங்கல்சூளை அமைத்து இயற்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தி, சூழலை மாசுபடுத்திய, 185 செங்கல் சூளைகளுக்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ரூ.12.28 கோடி அபராதம் விதித்துள்ளது.
கோவை மாவட்டம், தடாகம் பள்ளத்தாக்கில் உள்ள கிராமங்களில் சட்டவிரோதமாக இயங்கிய, 185 செங்கல் சூளைகளை, 2021 மார்ச் 17ல் கலெக்டர் உத்தரவின் படி மூடி சீலிட்டனர்.
அதன் பின் செங்கல் சூளைகளால் ஏற்பட்ட இழப்பீட்டை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மதிப்பீடு செய்து, 185 செங்கல் சூளைகளுக்கும் தனித்தனியாக, சுமார் ரூ. 32 லட்சம் ரூபாயை செலுத்த உத்தரவிட்டது.
சுற்றுச்சூழல் இழப்பீடு உத்தரவை ரத்து செய்யக் கோரி, செங்கல் சூளை உரிமையாளர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். ஐகோர்ட் அவ்வழக்கை விசாரித்தது.
சுற்றுச்சூழல் இழப்பீடு மதிப்பீட்டை மறுவரையறை செய்ய உத்தரவிட்டது. அதற்கு புது டில்லியை சேர்ந்த தி எனர்ஜி அண்ட் ரிசோர்சஸ் இன்ஸ்டிடியூட் (டெரி) நிறுவனத்தை நியமித்தது.
அதன்படி டெரி நிறுவனம், தடாகம் பள்ளத்தாக்கில் செங்கல் சூளைகளின் இயக்கத்தால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் சேதத்தையும், சேதமடைந்த சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுக்கும் செலவினங்களையும் ஆய்வு செய்தது.
இதையடுத்து, ஒவ்வொரு செங்கல் சூளைக்கும் சுற்றுச்சூழல் இழப்பீடாக ரூ.4.39 லட்சம் முதல் ரூ.12.28 கோடி வரை மதிப்பீடு செய்து, வரைவு அறிக்கையை சமர்ப்பித்தது.
இதை, செங்கல் சூளைகளுக்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

