/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.2 கோடியில் மாடல் பள்ளியாக அசத்தும் அரசு மேல்நிலைப்பள்ளி
/
ரூ.2 கோடியில் மாடல் பள்ளியாக அசத்தும் அரசு மேல்நிலைப்பள்ளி
ரூ.2 கோடியில் மாடல் பள்ளியாக அசத்தும் அரசு மேல்நிலைப்பள்ளி
ரூ.2 கோடியில் மாடல் பள்ளியாக அசத்தும் அரசு மேல்நிலைப்பள்ளி
ADDED : ஜன 29, 2024 11:19 PM

அன்னுார்:அன்னுாரில் 2 கோடி ரூபாய் செலவில் மாடல் பள்ளியாக அரசு மேல்நிலைப்பள்ளி மாறியுள்ளது.
அன்னுாரில் 73 ஆண்டுகளாக அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப் பள்ளியில் 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளி முன்னாள் மாணவர்கள் பலர், முன்னணி மருத்துவமனை தலைவர்களாகவும், டெல்லியில் மத்திய அரசின் உயர் பதவியிலும், வெளிநாடுகளிலும் பணிபுரிகின்றனர்.
இப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் பலர் ஒன்றிணைந்து பள்ளி நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு பல பணிகளை கடந்த ஆண்டு துவக்கினர்.
வகுப்பறைகளை சீரமைத்தல், அறிவியல் ஆய்வுக்கூடம், புதிய ஆய்வக கட்டிடம், ஸ்மார்ட் வகுப்பறை, நுாலக கட்டிடம் புதுப்பித்தல், 73 கண்காணிப்பு கேமரா அமைத்தல், 20 வகுப்புகளுக்கு மின்விளக்கு மற்றும் மின்விசிறி அமைத்தல், மாணவர்களின் இருக்கை புதுப்பித்தல், 35 வகுப்பறைகளுக்கு மேஜை அளித்தல், மாணவ மாணவியருக்கு தையல் பயிற்சி அளித்தல், கூடைப்பந்து மைதானம் சீரமைத்தல், கழிப்பறைகள் அமைத்தல், கழிப்பறைகளை துாய்மையாக பராமரித்தல், இரவு காவலர் நியமித்தல் ஆகிய பணிகளை 2 கோடி ரூபாய் செலவில் செய்து வருகின்றனர்.
இந்த பணிகளை பள்ளிக்கு அர்ப்பணிக்கும் விழா வருகிற 2ம் தேதி மதியம் 2:30 மணிக்கு பள்ளி வளாகத்தில் நடக்கிறது.
இதில் முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு சிறப்புரையாற்றுகிறார். கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இதுகுறித்து தலைமை ஆசிரியை சித்ரா கூறுகையில், ''முன்னாள் மாணவர்கள் இரண்டு கோடி ரூபாயில் பள்ளிக்கு பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர்.
வருகிற கல்வியாண்டில் பதினோராம் வகுப்பில் இரண்டு குரூப்புகள் ஆங்கில வழியில் துவக்கப்பட உள்ளன. கூடுதல் வசதி இங்கு செய்யப்பட்டு வருகிறது,'' என்றார்.