/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.30 லட்சம் தங்கக்கட்டி மோசடி; ஒருவர் கைது
/
ரூ.30 லட்சம் தங்கக்கட்டி மோசடி; ஒருவர் கைது
ADDED : டிச 02, 2025 07:45 AM

கோவை: கர்நாடக மாநிலம், மங்களூரு உர்வா அருகே ஸ்வர்ணா ஜுவல்லர்ஸ் எனும் நகைக்கடை அமைந்துள்ளது. இந்நகைக்கடைக்கு சென்ற அருண் என்பவர், 10 கிராம் எடையுள்ள 24 தங்க பிஸ்கட்டுகள் வேண்டும் என்றார்.
தங்க பிஸ்கட்டுகளை தனது அலுவலகத்துக்கு கொண்டு வந்து கொடுக்குமாறும், ரூ.30 லட்சத்தை, ஆர்.டி.ஜி.எஸ்., செய்வதாகவும் தெரிவித்தார்.
கடை ஊழியர்கள் அவரது இருப்பிடத்துக்கு சென்று, தங்க பிஸ்கட்டுகளை கொடுத்தனர். அந்நபர் பணம் தராமல் மாயமானார். புகாரின்படி, உர்வா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
விசாரணையில் தங்க பிஸ்கட்டுகளை வாங்கி மோசடியில் ஈடுபட்டது, கோவை சிங்காநல்லுாரை சேர்ந்த புகழ் ஹசன், 50 எனத் தெரிந்தது. கோவை வந்த போலீசார், புகழ் ஹசனை புலியகுளம் பகுதியில் கைது செய்தனர்.
இவர் மும்பை, ஐதராபாத், திருப்பதி மற்றும் தமிழகத்தின் சித்தோடு உள்ளிட்ட இடங்களில் இது போல் மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது.

