/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விதி மீறல் லாரிகளுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம்
/
விதி மீறல் லாரிகளுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம்
ADDED : செப் 14, 2025 11:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவில்பாளையம்; மோட்டார் வாகன விதி மீறலுக்காக ஐந்து டிப்பர் லாரிகளுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கிராவல் மண் லோடு ஏற்றி செல்லும் டிப்பர் லாரிகள் விதிமீறலில் ஈடுபடுவதாக போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து நேற்று கோவில்பாளையம் போலீசார் துடியலுார் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் கிராவல் மண் ஏற்றி வந்த ஐந்து டிப்பர் லாரிகள் மோட்டார் வாகன விதிமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து லாரிகள் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு செல்லப்பட்டு மொத்தம் ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.