/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேலை வாங்கித்தருவதாக ரூ.3.70 லட்சம் மோசடி
/
வேலை வாங்கித்தருவதாக ரூ.3.70 லட்சம் மோசடி
ADDED : ஆக 02, 2025 11:44 PM
கோவை: ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3.70 லட்சம் மோசடி செய்த பெண் உட்பட இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கோவை ஏழுர் வட புதுாரை சேர்ந்தவர் பாக்யராஜ், 41. இவரது பள்ளி நண்பர்கள் மூலம், கோவை தொப்பம்பட்டி பிரிவை சேர்ந்த மவுரீஸ், 39, நித்யா, 35 ஆகியோர் அறிமுகமாகினர். மவுரீஸ், இந்திய ரயில்வேயில் கேட்டரிங் கான்ட்ராக்ட் எடுத்துள்ளதாகவும் அதன் மூலம், பல லட்சம் ரூபாய் சம்பாதித்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார். இதை நம்பிய பாக்யராஜ், ஆன் லைன் மூலம் ரூ.5.71 லட்சத்தை மவுரீஸ்க்கு அனுப்பினார். ஆனால், பணத்தை பெற்றுக் கொண்ட மவுரீஸ் உறுதியளித்தபடி, வேலை வாங்கித்தரவில்லை. இதையடுத்து பணத்தை திரும்ப தர வலியுறுத்தினார். இதையடுத்து ரூ.2.01 லட்சத்தை மவுரீஸ் வழங்கினார். மீதமுள்ள ரூ.3.70 லட்சத்தை பலமுறை கேட்டும் திரும்பித்தரவில்லை. புகாரையடுத்து, துடியலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.