ADDED : மார் 31, 2026 06:59 PM
அ நிறம் | அளவு
கோவை: கோவை மாவட்டத்தில் அமைத்துள்ள தேர்தல் பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழுவினர் பல்வேறு இடங்களில் சோதனை நடத்துகின்றனர். ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லும் பணம் மற்றும் பரிசு பொருட்களை பறிமுதல் செய்கின்றனர்.
30ம் தேதி காலை 6 முதல் 31ம் தேதி காலை 6 வரை நடத்திய சோதனையில், ரூ.38 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. இதில், சிங்காநல்லுார் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் ரூ.24 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு, கருவூலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
