/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
துணை சுகாதார நிலையம் கட்ட ரூ. 41 லட்சம் ஒதுக்கீடு
/
துணை சுகாதார நிலையம் கட்ட ரூ. 41 லட்சம் ஒதுக்கீடு
ADDED : ஜன 31, 2025 11:51 PM
அன்னுார்; பொன்னே கவுண்டன்புதுாரில், துணை சுகாதார நிலைய கட்டிடம் கட்ட, 41 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
அன்னுார் ஒன்றியத்தில், 16 ஊராட்சிகளில் துணை சுகாதார நிலையங்கள் செயல்படுகின்றன. இதில் மசக்கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சியில் உள்ள பொன்னேகவுண்டன்புதுார் துணை சுகாதார நிலைய கட்டிடம் மோசமான நிலையில் உள்ளது. இங்கு புதிய கட்டிடம் கட்டித் தர, மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, கலெக்டர் விருப்ப நிதியிலிருந்து, 41 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் ஒதுக்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கோவை கலெக்டர் கிராந்தி குமார் பிறப்பித்த உத்தரவில், 'பொன்னே கவுண்டன் புதூரில், புதிய துணை சுகாதார நிலைய கட்டிடம் கட்ட, 41 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) இ- டெண்டர் முறையில் ஒப்பந்த புள்ளிகள் பெற்று, உரிய தொழில் நுட்ப அங்கீகாரம் பெற்று பணிகளை முடிக்க வேண்டும்.
குறித்த காலத்திற்குள் பணிகளை முடிக்காவிட்டால், ஒப்பந்ததாரருக்கு அபராதம் விதிக்கப்படும். சம்பந்தப்பட்ட இணையத்தில், உடனுக்குடன் பணி முன்னேற்ற அறிக்கையை பதிவேற்றம் செய்ய வேண்டும்,'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.