/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சைபர் கிரைம் குற்றங்களில் 4.25 கோடி ரூபாய் மீட்பு
/
சைபர் கிரைம் குற்றங்களில் 4.25 கோடி ரூபாய் மீட்பு
ADDED : ஜூலை 21, 2025 06:41 AM
கோவை; கடந்த ஆறு மாதங்களில், 4,569 சைபர் கிரைம் வழக்குகளில், ரூ.36 கோடி மோசடியில், ரூ.4.25 கோடியை போலீசார் மீட்டுள்ளனர்.
கடந்த, ஜன., முதல், ஜூன், 30ம் தேதி வரையிலான காலத்தில் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார், 4,569 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இதில், 3,525 வழக்குகள் நிதி தொடர்பான வழக்குகள், 1,044 வழக்குகள் நிதி தொடர்பில்லாதவை. மொத்தம், 161 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
ரூ.36.52 கோடி மோசடி அரங்கேறியுள்ளது. இதில், ரூ4.25 கோடியை போலீசார் மீட்டு, 43 குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். ரூ.4.56 கோடி மோசடி பணத்தை முடக்கியுள்ளனர். ஏழு பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சைபர் கிரைம் போலீசார் கூறுகையில்,'சிறிய லாபத்துக்காக ஆசைப்பட்டு பொதுமக்கள் அதிக பணத்தை இழக்கின்றனர். மோசடிகள் குறித்து அறிந்திருந்தும் மக்கள் ஏமாறுகின்றனர்.
தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் எவ்வளவு விரைந்து புகார் அளிக்கின்றனரோ அவ்வளவு சீக்கிரம் குற்றவாளிகளை பிடிக்க முடியும்' என்றனர்.