/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கார் தருவதாக ரூ.5 லட்சம் மோசடி
/
கார் தருவதாக ரூ.5 லட்சம் மோசடி
ADDED : மார் 17, 2024 01:23 AM
கோவை;கோவை ராம் நகரை சேர்ந்தவர் சஞ்சீவ்குமார், 50; ஆர்.எஸ்.,புரத்தில் உபயோகப்படுத்திய கார்களை வாங்கி, விற்கும் நிறுவனம் நடத்தி வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன் இவருக்கு மொபைல் போனில், ஆனந்த என்பவர் அழைத்துள்ளார். அவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் சஞ்சீவ் குமாரின் நிறுவனத்தில் கார் வாங்கியதாகவும், தற்போது தனது உறவினர் தினேஷ் குமார் என்பவரின் காரை விற்பனை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து ஆனந்த் கூறிய அவரது உறவினர் தினேஷ் குமாரை, சஞ்சீவ் குமார் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தினேஷ் குமார், தனது கார் என கூறி சில போட்டோக்களை காண்பித்துள்ளார்.
இதை நம்பிய சஞ்சீவ்குமார் அந்த காருக்கு ரூ.5 லட்சத்தை மூன்று தவணைகளாக அவர் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தார்.
அதன் பின் தினேஷ்குமார் காரை கொடுக்காமல் இருந்துள்ளார். சஞ்சீவ்குமார் கேட்ட போது தனக்கு பணம் வரவில்லை என தினேஷ் குமார் கூறியுள்ளார். இதை தொடர்ந்து சஞ்சீவ் குமார், ஆனந்தை தொடர்புகொள்ள முயன்றார். அவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இருவரது விவரங்களும் கிடைக்கவில்லை.
சஞ்சீவ்குமார் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

