/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடிநீர் திட்ட மறு சீரமைப்பு பணிக்கு ரூ.51 கோடி ஒதுக்கீடு
/
குடிநீர் திட்ட மறு சீரமைப்பு பணிக்கு ரூ.51 கோடி ஒதுக்கீடு
குடிநீர் திட்ட மறு சீரமைப்பு பணிக்கு ரூ.51 கோடி ஒதுக்கீடு
குடிநீர் திட்ட மறு சீரமைப்பு பணிக்கு ரூ.51 கோடி ஒதுக்கீடு
ADDED : நவ 19, 2025 03:50 AM
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், 295 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்ட மறு சீரமைப்பு பணிக்கு, 51 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தி.மு.க. கோவை தெற்கு மாவட்ட செயலாளர் முருகேசன் அறிக்கை:
பொள்ளாச்சி வடக்கு, தெற்கு மற்றும் கிணத்துக்கடவு ஒன்றியங்களில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, மேற்கு மண்டல பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போது, 295 ஊரக குடியிருப்புகளுக்கான குடிநீர் திட்ட மறு சீரமைப்புக்கு, 51 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
கூட்டுக்குடிநீர் திட்டத்திலுள்ள பழுதடைந்த கான்கிரீட் குழாய்களுக்கு பதிலாக, வார்ப்பு இரும்பு குழாய்கள் மற்றும் புதிய மின் மோட்டார் மாற்றும் பணிகள் நடைபெறவுள்ளது.
இந்த திட்டத்தின் மறுசீரமைப்பு பணிகள் துவக்க விழா, போடிபாளையம் ஊராட்சி குளத்துார் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் தமிழக வளர்ச்சித்துறை, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தலைமையில், எம்.பி. ஈஸ்வரசாமி ஆகியோர் இன்று துவக்கி வைக்க உள்ளனர்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

