/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஆன்லைன் டிரேடிங்'கில் ரூ.52 லட்சம் மோசடி
/
'ஆன்லைன் டிரேடிங்'கில் ரூ.52 லட்சம் மோசடி
ADDED : மே 29, 2025 12:41 AM
கோவை : கோவை, கணபதி மாநகரை சேர்ந்த, 60 வயது நபர், துடியலுாரில் பேக்கரி நடத்தி வருகிறார். இவரது, 'வாட்ஸாப்' எண்ணுக்கு ஏப்ரலில் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில், 'எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால், ஆன்லைன் டிரேடிங் செய்து அதிக லாபம் ஈட்டி தரப்படும்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
நம்பி, வாட்ஸாப் எண்ணுக்கு பேசியுள்ளார். அதன்பின், பேக்கரி உரிமையாளரின் மொபைல் எண்ணை, 'டெலிகிராம்' குழுவில் இணைத்து, பணம் அனுப்ப வேண்டிய வங்கி கணக்கு விபரங்கள் அனுப்பப்பட்டன. 10 தவணைகளில், 51.70 லட்சம் ரூபாயை அனுப்பியுள்ளார்.
முதலீடு செய்த பணத்துக்கு லாபம் கேட்டபோது, மேலும் பணம் செலுத்த கேட்டுள்ளனர். ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் மோசடி செய்தவர்களை தேடி வருகின்றனர்.