/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குதிரை வண்டி கோர்ட் வளாகத்தில் கட்டடம் கட்ட ரூ.55 கோடி ஒதுக்கீடு
/
குதிரை வண்டி கோர்ட் வளாகத்தில் கட்டடம் கட்ட ரூ.55 கோடி ஒதுக்கீடு
குதிரை வண்டி கோர்ட் வளாகத்தில் கட்டடம் கட்ட ரூ.55 கோடி ஒதுக்கீடு
குதிரை வண்டி கோர்ட் வளாகத்தில் கட்டடம் கட்ட ரூ.55 கோடி ஒதுக்கீடு
ADDED : நவ 27, 2024 10:11 PM
கோவை; கோவை குதிரை வண்டி கோர்ட் வளாகத்தில்,12 நீதிமன்றங்கள் செயல்படும் வகையில் கட்டடம் கட்டுவதற்கு, 55 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கோவை அரசு கலைக்கல்லுாரி ரோட்டிலுள்ள, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், 47க்கும் மேற்பட்ட கோர்ட்கள் செயல்பட்டு வருகின்றன. 25 நீதிமன்றங்கள் மட்டுமே செயல்பட்டு வந்த இவ்வளாகத்தில், படிப்படியாக பல்வேறு சிறப்பு நீதிமன்றங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், புதிய நீதிமன்றம் திறக்க போதிய இட வசதி இல்லாவிட்டாலும்,வேறு வழியின்றி, அதே கட்டடத்தில், கோர்ட் அலுவலகங்கள், நீதிமன்ற அறையாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. சுமார் 10 ஏக்கர் பரப்புடைய இந்த வளாகத்தில், அதிக கட்டடங்கள் இருப்பதால், மக்கள் நடமாட, வாகனங்கள் நிறுத்த போதிய வசதியின்றி கோர்ட் வளாகத்திற்குள்ளேயே நெரிசல் ஏற்படுகிறது.
சிறப்பு நீதிமன்றங்களை மட்டும் வேறு இடங்களுக்கு மாற்றினால், கோர்ட் வளாகத்தில் இடப்பற்றாக்குறை பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என ஆலோசிக்கப்பட்டது. இதனால், கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ள பகுதியில், அவினாசி ரோடு மேம்பாலம் அருகில் குதிரை வண்டி கோர்ட் வளாகத்தில், 72 கோடி ரூபாய் செலவில், 14 கோர்ட் செயல்படும் வகையில் ஒருங்கிணைந்த வளாகம் கட்ட, கடந்த மூன்று ஆண்டுக்கு முன்பு பொதுப்பணித்துறையால் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, ஐகோர்ட் தரப்பில், தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், குதிரை வண்டி கோர்ட் வளாகத்தில், ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் கட்ட, 54.96 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான அரசாணை கடந்த 5 ம்தேதி வெளியிடப்பட்டது. 12 நீதிமன்றங்கள் செயல்படுவதற்கான கட்டமைப்புடன் கட்டடம் கட்டப்பட உள்ளது. போக்சோ கோர்ட் வழக்கு விசாரணைக்கு, இந்த கட்டடத்தில் தனி அறை கட்டப்படுகிறது.முதற்கட்டமாக, 4.5 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளதால், கட்டுமான பணிகள் விரைவில் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புராதன சின்னமாக அறிவிக்கப்பட்ட குதிரை வண்டிகோர்ட் பழைய கட்டடத்தை பழமை மாறாமல் புனரமைக்க ஒன்பது கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் தற்போது முடியும் தருவாயில் உள்ளது குறிப்பிடத்தக்கது.