/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேளாண் உட்கட்டமைப்பு பணிகளுக்கு ரூ.63 கோடி
/
வேளாண் உட்கட்டமைப்பு பணிகளுக்கு ரூ.63 கோடி
ADDED : ஆக 12, 2025 08:10 PM
அன்னுார்; கோவை மாவட்டத்தில், வேளாண் உட்கட்டமைப்பு பணிகளுக்கு, 63 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட வேளாண் வணிகத் துறையின் வாயிலாக, வேளாண் உட்கட்டமைப்பு பணிகளுக்கு பெறப்படும், வங்கி கடனுடன் கூடிய மானியத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
கோவை மாவட்டத்திற்கு நடப்பு நிதியாண்டில், 63 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக அதிகபட்சமாக, 2 கோடி ரூபாய் வரையிலான கடனுக்கு, ஏழு ஆண்டு காலத்துக்கு, ஆண்டுக்கு மூன்று சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ், சந்தையுடன் கூடிய விநியோக தொடர்பு சேவை, சேமிப்புக் கிடங்குகள், சேமிப்பு கலன்கள், சிற்பம் கட்டும் கூடங்கள், விளைப் பொருட்களை மதிப்பிடுவதற்கான அமைப்பு, போக்குவரத்து தளவாட வசதிகள், முதன்மைப்படுத்தப்படும் பதப்படுத்தும் மையம், உள்பட பல்வேறு கட்டமைப்புகளுக்கு, கடன் பெற விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டத்தில் இணைய விரும்புவர்கள், தாங்கள் விரும்பும் வங்கி கிளைக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு அன்னுார் உதவி வேளாண் அலுவலர் வினோத்குமார் 9943396618, கோவை வேளாண் அலுவலர் சூர்யா 90034 54009, என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு வேளாண் அலுவலர் அறிக்கையில் கூறியுள்ளார்.