/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேளாண் உட்கட்டமைப்பு பணிகளுக்கு ரூ.6.3 கோடி
/
வேளாண் உட்கட்டமைப்பு பணிகளுக்கு ரூ.6.3 கோடி
ADDED : ஆக 14, 2025 08:39 PM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில், வேளாண் உட்கட்டமைப்பு பணிகளுக்கு, வங்கி கடனுடன் மானிய திட்டம் செயல் படுத்தப்படுகிறது. இதற்காக, கிணத்துக்கடவு வட்டாரதிற்கு, 6.3 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில், விவசாயிகள் விளைபொருட்களை சந்தை படுத்துதல், 2 கோடி வரையிலான கடன் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளது. இத்திட்டதின் வாயிலாக, மின் சந்தையுடன் கூடிய வினியோக தொடர் சேவை, சேமிப்பு கிடங்கு மற்றும் கலன்கள், குளிர்பதன வசதிகள், வாடகை இயந்திர மையம் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்புகளுக்கு கடன் பெற விண்ணப்பிக்கலாம்.
சந்தேகங்களுக்கு ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம், வேளாண் வணிக உதவி அலுவலர் சுந்தரராஜனை 99424 11566 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என, கோட்ட வேளாண் அலுவலர் ஹில்டா தெரிவித்தார்.

