ADDED : மார் 18, 2024 09:14 PM
அ நிறம் | அளவு
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலுார் நகராட்சியில், 63 லட்ச ரூபாய் மதிப்பில் புதிய வளர்ச்சி பணிகளுக்கான தொடக்க விழா நடந்தது.
நகராட்சியின், 24வது வார்டு காந்தி நகரில், 28.90 லட்ச ரூபாயில் வடிகால், 7வது வார்டு சாரங்கா நகரில், 20 லட்சத்தில் வடிகால், ஆழ்குழாய் கிணறு, கான்கிரீட் ரோடு, 12வது வார்டு கணேசபுரத்தில், 14 லட்சத்தில் வடிகால், ஆழ்குழாய் கிணறு மற்றும் குழாய் விஸ்தரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
இதற்கான துவக்க விழா காந்திநகரில் நடந்தது. நகராட்சி தலைவர் அறிவரசு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், நகராட்சி கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
