/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு 64.40 லட்சம் ரூபாய் மானியம்
/
ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு 64.40 லட்சம் ரூபாய் மானியம்
ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு 64.40 லட்சம் ரூபாய் மானியம்
ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு 64.40 லட்சம் ரூபாய் மானியம்
ADDED : நவ 19, 2025 01:20 AM
கோவை: கோவை, வேளாண் பல்கலையில் உள்ள, வேளாண் வணிக மேம்பாட்டு இயக்கம், தொழில்நுட்ப வணிக காப்பகம் சார்பில், ஸ்டார்ட்அப் சார்ந்த பல்வேறு பயிற்சிகள், வழிகாட்டுதல்கள், அரசின் நிதியுதவிகள் பெற்றுத் தரப்படுகின்றன.
கடந்த 2019 முதல், மத்திய வேளாண் அமைச்சகத்தின், ஆர்.கே.வி.ஒய்., ராப்டார் ராபி மையமாக செயல்பட்டு, திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில், வேளாண்தொழில்முனைவு திட்டத்தில், (ஏ.ஓ.பி.,) ரூ.5 லட்சம் வரையும், ஸ்டார்ட்அப் வேளாண் வணிகக் காப்பக திட்டம் (செய்ப்) வாயிலாக ரூ.25 லட்சம் மானியமும் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை, 131 ஸ்டார்ப்அப்களுக்கு ரூ.16.04 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பல்கலை துணைவேந்தர் (பொ) தமிழ்வேந்தன் தலைமையில் நடந்த விழாவில், செய்ப் திட்டத்தில் 10 ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு இரண்டாம் தவணையாக ரூ.40.80 லட்சம்; ஏ.ஓ.பி., திட்டத்தில் 13 ஸ்டார்ட்அப்களுக்கு 3வது தவணையாக ரூ. 23.60 லட்சம் என மொத்தம் ரூ. 64.40 லட்சம் மானியமாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், வேளாண் மேம்பாட்டு இயக்கக இயக்குநர் சோமசுந்தரம், தொழில்நுட்ப வணிகக் காப்பக தலைமைச் செயல் அலுவலர் ஞானசம்பந்தம் உட்பட பலர் பங்கேற்றனர்.

