/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆன்லைன் டிரேடிங் ஆசைகாட்டி முதியவரிடம் ரூ.70 லட்சம் மோசடி
/
ஆன்லைன் டிரேடிங் ஆசைகாட்டி முதியவரிடம் ரூ.70 லட்சம் மோசடி
ஆன்லைன் டிரேடிங் ஆசைகாட்டி முதியவரிடம் ரூ.70 லட்சம் மோசடி
ஆன்லைன் டிரேடிங் ஆசைகாட்டி முதியவரிடம் ரூ.70 லட்சம் மோசடி
ADDED : அக் 19, 2024 10:03 PM
கோவை:கோவை, சிங்காநல்லுாரைச் சேர்ந்தவர் அன்புமணி, 68; தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். வீட்டில் இருந்தபடியே பகுதி நேர வேலை தேடி வந்தார்.
அன்புமணியின் 'வாட்ஸாப்' செயலிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், 'ஆன்லைன் டிரேடிங் வாயிலாக வீட்டில் இருந்தபடியே பல லட்சங்கள் சம்பாதிக்கலாம்' என, இருந்தது.
குறுஞ்செய்திக்கு அன்புமணி பதிலளித்துள்ளார். பின்னர், மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் அவரிடம், 'வாட்ஸாப்'பில் தொடர்பு கொண்டு, தாங்கள் ஆன்லைன் டிரேடிங் செய்து வருவதாகவும், அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
நம்பிய அன்புமணி, மோசடி கும்பல் கொடுத்த பல்வேறு வங்கி கணக்கிற்கு, 11 தவணைகளில், 70 லட்சத்து, 17,000 ரூபாய் பணத்தை அனுப்பியுள்ளார். ஆனால், அவர்கள் கூறியபடி லாபம் வரவில்லை.
மோசடி கும்பலை சேர்ந்தவர்களிடம் கேட்டபோது, அவர்கள் மேலும் பணம் கேட்டுள்ளனர். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அன்புமணி, போலீசில் புகார் அளித்தார். கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.