/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெண்ணின் மருத்துவ சிகிச்சைக்கு ரூ.7.25 லட்சம் வழங்க உத்தரவு
/
பெண்ணின் மருத்துவ சிகிச்சைக்கு ரூ.7.25 லட்சம் வழங்க உத்தரவு
பெண்ணின் மருத்துவ சிகிச்சைக்கு ரூ.7.25 லட்சம் வழங்க உத்தரவு
பெண்ணின் மருத்துவ சிகிச்சைக்கு ரூ.7.25 லட்சம் வழங்க உத்தரவு
ADDED : பிப் 18, 2025 11:29 PM
கோவை; பெண்ணின் மருத்துவ சிகிச்சைக்கு, 7.25 லட்சம் ரூபாய் வழங்க, இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு, நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.
கோவை, பி.என்.புதுாரை சேர்ந்த நடராஜன் என்பவர், 'கேர் ெஹல்த் இன்சூரன்ஸ்' என்ற நிறுவனத்தில், குடும்ப மருத்துவ காப்பீடு செய்திருந்தார்.
இதற்கான இன்சூரன்ஸ் பிரீமியம், டிராவல்ஸ் இன்சூரன்ஸ் சேர்த்து, 64,000 ரூபாய் செலுத்தினார். இதற்கிடையில், நடராஜன், அவரது மனைவியுடன் அமெரிக்காவுக்கு விமானத்தில் பயணித்தார். அப்போது, அவரது மனைவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் விமானம் தரையிறங்கியதும், அங்குள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
சிகிச்சைக்கான செலவு தொகை, 7.27 லட்சம் ரூபாய் வழங்க கோரி, இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு விண்ணப்பித்தார். ஆனால், இன்சூரன்ஸ் நிறுவனம், சிகிச்சைக்கான கட்டணத்தை வழங்கவில்லை.
இதனால், இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், ''இன்சூரன்ஸ் நிறுவனம் சேவை குறைபாடு செய்துள்ளதால், மனுதாரர் மனைவிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கான கட்டணம், 7.27 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 40,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.