/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெங்காய பட்டறைக்கு ரூ.87 ஆயிரம் மானியம்
/
வெங்காய பட்டறைக்கு ரூ.87 ஆயிரம் மானியம்
ADDED : ஆக 25, 2025 10:07 PM
கோவை; வெங்காய விவசாயிகள் பட்டறை அமைக்க, 87,500 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.
கலெக்டர் அறிக்கை:
தொண்டாமுத்துார், சுல்தான்பேட்டை, சூலுார் ஆகிய பகுதிகளில் 1,500 ஹெக்டேரில் வெங்காய சாகுபடி செய்யப்படுகிறது. புதிதாக வெங்காய சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில், தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் ஹெக்டேருக்கு 24,000 ரூபாய் மானியத்தில் சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள் வழங்கப்படுகின்றன.
நுண்ணீர் பாசனம் அமைக்க சிறு குறு விவசாயிகளுக்கு, 100 சதவீதம், இதர விவசாயிகளுக்கு, 75 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.
அறுவடை செய்யும்போது விலை குறைவாக இருந்தால், சேமித்து வைத்து அதிக விலை கிடைக்கும்போது விற்பனை செய்ய ஏதுவாக, 25 மெட்ரிக் டன்னுக்கு பட்டறை அமைக்க, 87,500 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.
இவ்வாறு, கலெக்டர் கூறியுள்ளார்.

