/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'டயாலிஸ் சென்டர்' கட்ட ரூ.98.70 லட்சம்
/
'டயாலிஸ் சென்டர்' கட்ட ரூ.98.70 லட்சம்
ADDED : அக் 14, 2025 10:33 PM
கோவை; கோவை மாநகராட்சி, 95வது வார்டு, போத்தனுார் சத்திரம் வீதியில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது. கர்ப்பிணிகளுக்கு அவசர கால சிகிச்சை, மாதாந்திர பரிசோதனை, மருத்துவ சேவை அளிக்கப்படுகிறது.
சர்க்கரை நோயாளிகளுக்காக, 'டயாலிஸ் சென்டர்' அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரினர். அதையேற்று, ரூ.98.70 லட்சம் ஒதுக்கி, நிர்வாக அனுமதி வழங்கி, நேற்று நடந்த மாமன்ற கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
n மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியரில் பொதுத்தேர்வில் 100க்கு 100 மதிப்பெண் எடுப்போருக்கு, ஒரு பாடத்துக்கு ரூ.10 ஆயிரம் வீதம் ஊக்கத்தொகை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, 23 பிளஸ் 2 மாணவர்கள், 12 பத்தாம் வகுப்பு மாணவர்கள் என, 35 பேருக்கு ஊக்கத்தொகை வழங்க, மாநகராட்சி கல்வி நிதியில் ரூ.3.5 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதேபோல், 330 ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க, ரூ.19.80 லட்சம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
n சுண்டக்காமுத்துார் குளம் 7.25 ஏக்கர் பரப்பு கொண்டது. அருகில் உள்ள மலைப்பகுதியில் மழைக்காலங்களில் பெய்யும் மழை நீர், திறந்தவெளி நிலங்கள் வழியாக குளத்துக்கு வந்தடையும். தற்போது வீடுகள், ரோடு அமைக்கப்பட்டு விட்டதால், குளத்துக்கு தண்ணீர் வர முடியாத சூழல் உள்ளது.
குனியமுத்துார் செங்குளத்துக்கு செல்லும், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வாய்க்கால் வழியாக செல்லும் நீரை ஒரு கி.மீ., துாரத்துக்கு குழாய் பதித்து, மின் மோட்டார் மூலம் சுண்டக்காமுத்துார் குளத்துக்கு தண்ணீர் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, 78 லட்சம் ரூபாய் ஒதுக்கி, மன்றத்தில் தீர்மானிக்கப்பட்டது.