/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
44 ஆயிரம் உறுப்பினர்களுக்கு ரூ.187 கோடி நகைக்கடன் தள்ளுபடி
/
44 ஆயிரம் உறுப்பினர்களுக்கு ரூ.187 கோடி நகைக்கடன் தள்ளுபடி
44 ஆயிரம் உறுப்பினர்களுக்கு ரூ.187 கோடி நகைக்கடன் தள்ளுபடி
44 ஆயிரம் உறுப்பினர்களுக்கு ரூ.187 கோடி நகைக்கடன் தள்ளுபடி
ADDED : நவ 23, 2024 11:23 PM
கோவை: கோவை மாவட்டத்தில், 168 கூட்டுறவு நிறுவனங்களில், 44 ஆயிரத்து 960 உறுப்பினர்களுக்கு, ரூ.187 கோடி நகைக்கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டு, அவர்கள் அடமானம் வைத்த நகைகள் மற்றும் தள்ளுபடி சான்று வழங்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் துயர் துடைக்கும் வகையில், பயிர்கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ், 2021ம் ஆண்டு, தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக, 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகளுக்கு 12 ஆயிரத்து 110 கோடி பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக வழங்கப்பட்டு, 2021 ஜன., 31ல் நிலுவையிலிருந்து 344 கோடி பயிர்கடன், 27 ஆயிரத்து 130 விவசாய உறுப்பினர்களுக்கு முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கூட்டுறவு நிறுவனங்களில் ஒரு குடும்பத்தில் ஐந்து பவுனுக்கு உட்பட்டு பொது நகைக்கடன் பெற்றவர்களில், தமிழகத்தில் மொத்தம் 13 லட்சத்து 13 ஆயிரம் பயனாளிகளுக்கு 5,013 கோடி அளவுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான சான்றிதழுடன், அவர்கள் அடமானம் வைத்த நகைகளும் திருப்பி வழங்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் 168 கூட்டுறவு நிறுவனங்களில், 44 ஆயிரத்து 960 உறுப்பினர்களுக்கு 187.20 கோடி நகைக்கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டு, அவர்கள் அடமானம் வைத்த நகைகள் மற்றும் தள்ளுபடி சான்று வழங்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் 2,518 சுய உதவிக்குழுக்களில் 25 ஆயிரத்து 180 உறுப்பினர்களுக்கு 62.85 கோடி கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டு பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.