தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரூ.560 விலை உயர்ந்த ஊட்டி உருளைக்கிழங்கு

 ரூ.560 விலை உயர்ந்த ஊட்டி உருளைக்கிழங்கு

 ரூ.560 விலை உயர்ந்த ஊட்டி உருளைக்கிழங்கு


ADDED : பிப் 18, 2026 06:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 18, 2026 06:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் ஊட்டி உருளைக்கிழங்கு விலை ஒரே நாளில் மூட்டை ஒன்றுக்கு ரூ.560 விலை உயர்ந்து விற்பனை ஆனது.

மேட்டுப்பாளையம் நெல்லித்துறை சாலையில், நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கம், செயல்பட்டு வருகிறது. இங்கு, நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கேத்தி, கூடலூர் என பல்வேறு இடங்களில் உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழங் குகள் ஏலம் விடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக அதிகபட்சமாக 45 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை, ஊட்டி உருளைக்கிழங்கு ரூ.2,000 முதல் ரூ.2,500 வரை விற்பனை ஆனது. அதன் பின் மெல்ல மெல்ல விலை சரிந்து வந்தது.

இதையடுத்து, நேற்று முன் தினம் ஊட்டி கிழங்குகள் அதிகபட்சமாக ரூ.1,350க்கு விற்பனை ஆனது. சுமார் 150 மூட்டைகள் லோடு வந்தன. நேற்று ரூ.1,910க்கு விற்பனை ஆனது. 200 மூட்டைகள் லோடு வந்தன.

இதுகுறித்து, விவசாயிகள் கூறுகையில், நேற்று முன் தினம் வரத்து குறைந்த போதிலும், டிமாண்ட் இல்லை என்பதால் விலை ஏறவில்லை மாறாக குறைந்தது.

ஆனால் நேற்று டிமாண்ட் இருந்ததால் வரத்து உயர்ந்த போதிலும், விலை உயர்ந்தது. வழக்கமாக வரத்து அதிகரித்தால் விலை குறையும் என்பது குறிப்பிடத்தக்கது என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us