/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழா; ஏராளமான தொண்டர்கள் பங்கேற்பு
/
ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழா; ஏராளமான தொண்டர்கள் பங்கேற்பு
ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழா; ஏராளமான தொண்டர்கள் பங்கேற்பு
ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழா; ஏராளமான தொண்டர்கள் பங்கேற்பு
ADDED : அக் 07, 2025 11:00 PM
கருமத்தம்பட்டி; ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் சார்பில், நூற்றாண்டு விழா மற்றும் விஜய தசமி விழா, சூலூர் வட்டாரத்துக்கு உட்பட்ட கருமத்தம்பட்டி, சூலூர், வாகராயம் பாளையம் பகுதிகளில் கொண்டாடப்பட்டது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான தொண்டர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
வாகராயம்பாளையத்தில் நடந்த விழாவில், நிர்வாகி சபாபதி பேசுகையில், தன்னலமற்ற, தேசபக்தி கொண்ட தொண்டர்கள் லட்சக்கணக்கானோர் ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தில் உள்ளனர். தேசத்தின் முன்னேற்றத்தை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருவது சங்கம். இதன் முயற்சியாக, பாரதம்உலகின் குருவாக உயர்ந்து நிற்கிறது. நூற்றாண்டு விழாவை ஒட்டி, சமூக நல்லிணக்கம், குடும்ப மறுமலர்ச்சி,, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கலாச்சார பெருமையான சுதேசி, குடிமக்களின் கடமை ஆகியவற்றை வலியுறுத்தி பணிகள் மேற்கொள்ளப்படும், என்றார்.