ADDED : அக் 07, 2025 11:02 PM

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையத்தில் இசை தமிழ் சங்கத்தின், 26வது ஆண்டு விழா, இசை பயிலும் குழந்தைகளுக்கான பாராட்டு விழா, நவராத்திரி விழா என முப்பெரும் விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு, பொருளாளர் கமலவேணி, செயற்குழு உறுப்பினர்கள் மணிகண்டன், ஜெகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத்தலைவர் வெங்கடேசன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
இதில், பத்துக்கும் மேற்பட்ட இசை பள்ளிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் பரதநாட்டியம், இசைக்கருவிகள் இசைத்தல் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.
மூத்த இசை கலைஞர்களான சென்னனூர் குப்புராஜ், வித்வான் வெங்கடராமன், ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா முன்னாள் இசை ஆசிரியர் சர்மா ஆகியோர் கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
மாலை நடந்த நிறைவு விழாவுக்கு ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா காந்தி ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முன்னாள் முதல்வர் சதீஷ்குமார் தலைமை வகித்தார். சங்க செயலாளர் சிவாய ராமலிங்கம் நன்றி கூறினார்.