ADDED : ஜூலை 16, 2025 10:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஜெயந்தி கல்யாண மண்டபத்தில் இம்மாதம், 20ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை, 7:30 மணிக்கு குருபூஜை விழா நடக்கிறது. இதில், பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா சுவாமி நாராயணானந்தஜி மகராஜ், செல்வபுரம் வடக்கு சிவானந்தா தவக்குடில் சுவாமி ஸ்வயம் பிரகாஷணந்த ஆகியோர் ஆசியுரை வழங்குகின்றனர்.
நிகழ்ச்சிக்கு, சர்க்கரை மற்றும் பொதுநல மருத்துவர் டாக்டர் நவீன் பிரபு தலைமை வகிக்கிறார். சேவா பாரதி முன்னாள் விபாக் தலைவர் பழனிசாமி முன்னிலை வகிக்கிறார். தென் தமிழ்நாடு மாநில பொறுப்பாளர் ரமேஷ் சிறப்புரை ஆற்றுகிறார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.