/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலை ஆர்.டி.ஓ., ஆய்வு
/
மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலை ஆர்.டி.ஓ., ஆய்வு
ADDED : ஏப் 16, 2025 10:00 PM
அன்னுார், ; மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலை குறித்து கோவை வடக்கு ஆர்.டி.ஓ., நேரில் ஆய்வு செய்தார்.
கரியாம்பாளையத்தில் தனியார் தொழிற்சாலை ஆறு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியாகும் துர்நாற்றத்தால் மூச்சு திணறல் ஏற்படுகிறது. வாந்தி வருகிறது என பொதுமக்கள் இரண்டு ஆண்டுகளாக புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து தொடர்ந்து கோவை கலெக்டர் அலுவலகத்திலும், அன்னுார் தாலுகா அலுவலகத்திலும் மனு கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று கோவை வடக்கு ஆர்.டி.ஓ., கோவிந்தன், தாசில்தார் யமுனா கரியாம்பாளையத்தில் ஆய்வு செய்தனர்.
அவரிடம் பொதுமக்கள் கூறுகையில், 'மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும், வருவாய்துறையினரும் ஆய்வு செய்கின்றனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால் பலர் தங்கள் வீடுகளை காலி செய்து விட்டு, சென்று விட்டனர். உடனடியாக இதற்கு தீர்வு காண வேண்டும்,' என்றனர்.
ஆர்.டி.ஓ., மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை தொடர்பு கொண்டு, 'உடனடியாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும், என்றும், மாசு கட்டுப்பாட்டு வாரியம், தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் கூட்டம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடைபெறும்,' எனவும் தெரிவித்தார்.