
கோவை,- கல்லுாரிகளுக்கு இடையேயான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில், எஸ்.என்.எம்.வி., கல்லுாரி அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி சார்பில், மாநில அளவில் கல்லுாரிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி, கோவைப்புதுார் ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரி மைதானத்தில் நடக்கிறது.
நேற்று நடந்த நாக் அவுட் போட்டியில், எஸ்.என்.எம்.வி., மற்றும் டாக்டர் என்.ஜி.பி., தொழில்நுட்ப கல்லுாரி அணிகள் மோதின. எஸ்.என்.எம்.வி., அணி, 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. பிரேம்குமார் (56), கவுதம் (50) ஆகியோர் அரைசதம் அடித்தனர்.
என்.ஜி.பி., அணியின் ரேவந்த் (48) மட்டும் போராட, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால், 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழந்து 114 ரன்கள் மட்டுமே எடுத்தது. எஸ்.என்.எம்.வி., அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

