/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சென்னை - மதுரை ரயிலை மீண்டும் ஒருமுறை இயக்குங்க
/
சென்னை - மதுரை ரயிலை மீண்டும் ஒருமுறை இயக்குங்க
ADDED : ஜன 12, 2025 11:18 PM

கிணத்துக்கடவு; சென்னை -- மதுரை இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில், மீண்டும் பண்டிகை முடிந்த பின் இயக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதை தொடர்ந்து சென்னை -- மதுரை (06067) மற்றும் மதுரையில் இருந்து சென்னை (06068) என 11 முதல் 13 ம் தேதி வரை ரயில் சேவை ஒரு முறை மட்டுமே விடப்பட்டுள்ளது.
இதனால், பொதுமக்கள் பலர் பண்டிகை நாட்களில், தங்கள் சொந்த ஊர்களுக்கு எளிதாக சென்று விடுவர். ஆனால் அங்கிருந்து கிளம்பி மீண்டும் வர பஸ் பயணத்தை தொடரும் நிலை உள்ளது.
இதனால் பயணியர் பலர் அவதி அடையும் நிலை உள்ளது. எனவே, பண்டிகை நாட்கள் முடிந்து மீண்டும் பணியிடம் செல்ல, இந்த ரயிலை மீண்டும் ஒரு முறை இயக்க வேண்டுமென மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.