/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ரன் வித் பிளேக்' மராத்தான் மாற்றுத்திறனாளிகள் ஆர்வம்
/
'ரன் வித் பிளேக்' மராத்தான் மாற்றுத்திறனாளிகள் ஆர்வம்
'ரன் வித் பிளேக்' மராத்தான் மாற்றுத்திறனாளிகள் ஆர்வம்
'ரன் வித் பிளேக்' மராத்தான் மாற்றுத்திறனாளிகள் ஆர்வம்
ADDED : ஆக 17, 2025 11:26 PM

கோவை; கால்களை இழந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, 'ரன் வித் பிளேக்' மராத்தான் நேற்று நடந்தது.
நம் நாட்டின் ராணுவ வீரர்கள் பலர் போர் சமயத்திலும், தீவிரவாத தாக்குதல் சமயத்திலும் உயிரை தியாகம் செய்வதுடன், கை, கால்களையும் இழக்கின்றனர். இந்நிலையில், நம் ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, 'ரன் வித் பிளேக்' மராத்தான் நேற்று நடந்தது.
வ.உ.சி., மைதானத்தில் துவங்கிய மராத்தானில், பள்ளி கல்லுாரி மாணவர்கள், என்.ஜி.ஓ.,கள் என, 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு கி.மீ., துாரமும், 11, 18 வயதுக்குட்பட்டோருக்கு, 3 கி.மீ., 45 வயதுக்குட்பட்டோருக்கு, 5 கி.மீ., 10 கி.மீ., என பல்வேறு பிரிவுகளில் போட்டி நடந்தது. தேசிய கொடியை ஏந்தியவாறு, அவிநாசி ரோட்டில் ஆர்வமுடன் ஓடினர். முன்னதாக, மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, மராத்தானை துவக்கிவைத்தார். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.