/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிராமப்புற மதிப்பீடு விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
கிராமப்புற மதிப்பீடு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : மார் 18, 2025 10:12 PM

கிணத்துக்கடவு, ; கிணத்துக்கடவு, சொக்கனூரில் பங்கேற்பு கிராமப்புற மதிப்பீட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கிணத்துக்கடவு பகுதியில், கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மாணவர்கள் இரண்டு மாத கால, கிராமத்து உங்கள் திட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், சொக்கனூர் ஊராட்சியில், விவசாயிகளுக்கு பங்கேற்பு கிராமப்புற மதிப்பீட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில், கிராமப் பகுதியை வரைபடமாக வரைந்து, அப்பகுதி விவசாயிகளின் அன்றாட பணிகள் குறித்தும், அதில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காணுதல் மற்றும் பருவத்திற்கேற்ப பயிர் செய்தல் பற்றி விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, பயிர்களில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதை நிவர்த்தி செய்வதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.