/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பணிச்சுமை அதிகரிப்பால் கடும் அவதி; ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் புகார்
/
பணிச்சுமை அதிகரிப்பால் கடும் அவதி; ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் புகார்
பணிச்சுமை அதிகரிப்பால் கடும் அவதி; ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் புகார்
பணிச்சுமை அதிகரிப்பால் கடும் அவதி; ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் புகார்
ADDED : ஆக 04, 2025 08:50 PM
சூலுார்; ஊரக வளர்ச்சி துறையில் எண்ணற்ற பணிகள் கொடுப்பதால், பணிச்சுமை அதிகரித்துள்ளதாக, அலுவலர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில தலைவர் காந்திமதி நாதன், ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் தலைமை செயலாளருக்கு அனுப்பியுள்ள கடித விபரம்:
கோவை மாவட்டத்தில் பேரூராட்சிகளில் மேற்கொள்ள வேண்டிய, பழங்குடியினருக்கான வீடுகள் கட்டும் திட்டம், ஏற்கனவே கட்டப்பட்ட அரசு வீடுகளை பழுது நீக்கம் செய்யும் பணிகள் அனைத்தும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் வாயிலாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பேரூராட்சிகளில் உள்ள பள்ளி கட்டங்கள் பராமரிப்பு தொடர்பான பணிகளை, அந்தந்த பேரூராட்சி செயல் அலுவலர்கள் செய்ய வேண்டும், என, கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். ஆனால், எங்களுக்கு எந்த உத்தரவும் எங்கள் இயக்குனரிடம் இருந்து வரவில்லை, என, கூறி பணிகளை செய்யவில்லை. இந்நிலையில், பேரூராட்சிகளில் உள்ள பழங்குடியினருக்கு கட்டும் வீடுகள் மற்றும் பழுதடைந்த வீடுகளை பழுது நீக்கும் பணிகளை ஊரக வளர்ச்சி துறை மூலம் மேற்கொள்ள வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே மக்கள் நலத்திட்ட பணிகளை நேரம், காலம் பார்க்காமல் செய்து வரும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களுக்கு, மேலும் மேலும் எண்ணற்ற பணிகளை அளிப்பதால் பணிச்சுமையால் அவதிக்குள்ளாகி உள்ளனர். அதனால், புதிய பணிகளை தருவதை முற்றாக கைவிட வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.