ADDED : நவ 19, 2026 08:23 PM

அ நிறம் | அளவு
கோவை: வெற்றி வீடு திட்டத்துக்கு அவகாசம் வழங்க வேண்டும்; தனி பணியிடங்கள் உருவாக்க வேண்டும்.
7 ஆண்டு பணிபுரிந்த மேற்பார்வையாளர்களை இளநிலை பொறியாளர் நிலைக்கு தரம் உயர்த்த வேண்டும். 1,500க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர், கோவை கலெக்டர் அலுவலகம் முன் இன்று (நவ.,19) ஆர்ப்பாட்டம் நடத்தினர். அன்னுார் வட்டார வளர்ச்சி அலுவலரான, மாவட்ட தலைவர் முத்துராஜ் தலைமை வகித்தார். ஆனைமலை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் முன்னிலை வகித்தனர்.
