/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிராமப்புற வளர்ச்சி திட்டம் மாணவிகள் தகவல் சேகரிப்பு
/
கிராமப்புற வளர்ச்சி திட்டம் மாணவிகள் தகவல் சேகரிப்பு
கிராமப்புற வளர்ச்சி திட்டம் மாணவிகள் தகவல் சேகரிப்பு
கிராமப்புற வளர்ச்சி திட்டம் மாணவிகள் தகவல் சேகரிப்பு
ADDED : ஏப் 22, 2025 11:44 PM
சூலுார்; கோவை வேளாண் பல்கலையில் நான்காம் ஆண்டு படிக்கும் மாணவிகள், கிராமப்புற விவசாயப் பணி அனுபவ திட்டத்தின் ஒரு பகுதியாக சுல்தான்பேட்டை வட்டாரம் செஞ்சேரி கிராமத்தில் தங்கினர். விவசாயிகளுக்கு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர். விவசாயிகளின் ஒத்துழைப்புடன் கிராமப்புற மதிப்பீட்டை தயார் செய்தனர்.
கிராமத்தின் சமூக வரைபடம், வள வரைபடம், காலக் கோடு, ஜோடி வரிசை, தர வரிசை அணி, உள்ளிட்ட நுட்பங்களை பயன்படுத்தி, செஞ்சேரி கிராமம் குறித்த விரிவான தகவல்களை சேகரித்து, கிராம வளர்ச்சிக்கான திட்டத்தையும் தயாரித்தனர்.
இந்த கிராம வளர்ச்சிக்கான திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், கிராமப்புற விவசாய மேம்பாட்டுக்கு உதவியாக இருக்கும், என, அதிகாரிகள் கூறினர். பல்வேறு விதைகளை கொண்டு, கிராம வரைபடத்தினை மாணவிகள் உருவாக்கியிருந்தனர்.