ADDED : பிப் 12, 2026 05:18 AM

அ நிறம் | அளவு
சூலூர்: ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களின் வேலை நிறுத்தத்தால், பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், 125 நாள் வேலை உறுதி திட்டத்துக்கு, வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் தனி கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று முன்தினம் முதல்,தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், சூலூர் ஒன்றிய அலுவலகத்தில், மொத்தமுள்ள 42 பேரில், 17 பேர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். 24 பேர் நேற்று பணிக்கு வந்திருந்தனர்.
அலுவலர்கள் வேலை நிறுத்தத்தால் அலுவலக பணிகள், களப் பணிகள் தேக்கமடைந்துள்ளன. கடந்த இரு நாட்களாக அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள், அலுவலர்களை சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
